தமிழகத்தில் அதிர்ச்சி.. 5 ரூபாய் மருத்துவர் மரணம்.. சோகத்தில் மக்கள்.!
Cuddalore 5 rupees doctor passed away
கடலூரில் ரூ.5 முதல் 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த தாத்தாச்சாரியா என்ற மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் தாத்தாச்சாரியார் (வயது 92). கடந்த 1932 ஆண்டு பிறந்த இவர், 1990ம் ஆண்டு முதல் 24 ஆண்டுகள் டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அதன் பின்னர் தனது வீட்டிலேயே ஏழை எளிய மக்களுக்கு 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தனது கடைசி மூச்சு வரை மருத்துவராக சேவையாற்றி வந்துள்ளார்.
இவருக்கு 3 முறை இருதய அறுவை சிகிச்சை செய்த நிலையில் இன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவரது மறைவு அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Cuddalore 5 rupees doctor passed away