#BREAKING || கடலூர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழப்பு.. தமிழக முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்த வசந்தா என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cuddalore 3 killed in firecracker factory blast Tamil Nadu Chief Minister announces relief fund


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->