வீட்டிலேயே Home Made Gun தயாரித்த கைப்புள்ளைகள்.. குருவியை சுட தயாரித்து, ஜெயிலில் களி கிண்டும் சுவாரசியம்.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள குமாரப்பேட்டை பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம். இவரது நண்பர் திருமாணிக்குழி சங்கர். இவர்கள் யூ டியூபில் விடியோவை பார்த்து பொழுதை போக்கி வந்த நிலையில், யூ டியூப் மூலமாக கை துப்பாக்கியை செய்ய துவங்கியுள்ளனர். 

மரத்தை அறுத்து துப்பாக்கிக்கு தேவையானது போல வளைத்து, இரும்பு குழாயினை பொருத்தி, கடை கடையாக சென்று பல பொருட்களை வாங்கியுள்ளனர். இவர்களின் நடவடிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திருப்பாதிப்புலியூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், வீட்டில் சோதனை செய்துள்ளனர். அங்கு வேட்டை துப்பாக்கியை மும்மரமாக தயார் செய்து கொண்டு இருந்த இரண்டு பேரையும் கைது செய்தனர். 

பின்னர் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், காக்கா மற்றும் குருவிகளை வேட்டையாட துப்பாக்கியை தயார் செய்ததாகவும், தங்களின் வேட்டை துவங்குவதற்கு முன்னதாகவே காவல் துறையிடம் சிக்கிக்கொண்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது கடலூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

யூ டியூப் போன்ற பல இணையதளங்களில் உள்ள விபரீத விடியோவை பார்த்து, விபரீதமான செயல்களில் ஈடுபட்டால் என்ன மாதிரியான பின் விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் உதாரணமாக இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cudallore Thirupathiripuliyur Home Made Gun Culprits Arrest By Police


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal