சுடுகாட்டு நிலத்தை "திமுக EX.MLA" அபகரிக்க முயற்சி..! நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மார்.கம்யூனிஸ்ட் கட்சியினர்..!! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறையில் அரசு நிலத்தை முன்னாள் திமுக எம்எல்ஏ அபகரிப்பதற்கு அதிகாரிகள் துணை போவதாக கூறி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு..!

மயிலாடுதுறை நகராட்சி ரயில்வே கேட் அருகே 2000க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் மாப்படுகைஅருகே கிட்டப்பா பாலம் அருகே உள்ள மயான சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் சுடுகாட்டில் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்கு செய்வதற்கான மண்டபம் இல்லாததால் அதனை அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கிட்டப்பா பாலம் அருகே ஈமச்சடங்கு செய்யும் மண்டபத்தின் கட்டுமான பணியானது கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இந்த கட்டுமான பணியை பாதியில் தடுத்து நிறுத்தி நகராட்சிக்கு சொந்தமான நிலத்தை திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் என்பவர் அபகரிக்க முயல்வதாக குற்றம் சாட்டியும் அவருக்கு துணை போகும் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள மயிலாடுதுறை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பு குவிந்ததால் மயிலாடுதுறை டிஎஸ்பி சஞ்ஜீத் குமார் தலைமையில் காவல் ஆய்வாளர் செல்வம் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுடன் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.  இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளை நகராட்சி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CPM protested against DMK EXmla who tried to grab govt land


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->