பெரம்பலூர் : சேவை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.85 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு.!
court order to Rs85000 compensation for service deficiency
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நிர்மலா நகரை சேர்ந்தவர் முகமது சபீக். இவர் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டியுள்ளார். இந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிக்காக கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம்தேதி கட்டிடத்திற்கு பூச்சு மற்றும் பட்டி பார்ப்பதற்காக பெரம்பலூர் பழைய ஆர்டிஓ அலுவலகத்திற்கு எதிரில் உள்ள ஒரு ஏஜென்சியில் முப்பத்தைந்து மூட்டை ஒயிட் சிமெண்ட் வாங்கியுள்ளார்.
அந்த சிமெண்டை பயன்படுத்தும் போது சாதாரண சுண்ணாம்பு போல் இருந்துள்ளது. கலப்படமற்றதாகவும், தரம் குறைவாகவும் இருந்ததை பார்த்த முகமது சபீக் விக்னேஷ் ஏஜென்சீசுக்கு சென்று உரிமையாளரிடம் ஓயிட் சிமெண்ட் தரமற்றதாகவும், கலப்படம் உள்ளதால் தான் சுவற்றில் ஒட்டவில்லையே என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நான் சென்னை, சைதாபேட்டையில் உள்ள அல்டிரா டெக் சிமெண்ட் லிமிடெட் மேலாளரிடமிருந்து தான் ஓயிட் சிமெண்ட் ஏஜென்சீஸ் எடுத்து விற்பனை செய்து வருகிறேன் என்றும், அங்கிருந்து வந்ததை தான் நான் உங்களுக்கு விற்பனை செய்தேன் என்றும் கூறியுள்ளார்.
அதன் பின்னர் முகமது சபீக் வேறு கடையில் ஓய்ட் சிமெண்ட் வாங்கி கட்டித்திற்கு பயன்படுத்தியுள்ளார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான முகமது சபீக் சேவை குறைபாடு புரிந்தற்காக ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடும், வழக்கு செலவு தொகையும் வழங்க கோரி கடந்த 2019ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த ஆணைய தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துக்குமரன் உள்ளிட்டோர் அளித்த தீர்ப்பில், விக்னேஷ் ஏஜென்சீஸ் உரிமையாளர் சேவை குறைபாடு புரிந்ததால் பாதிக்கப்பட்ட முகமது சபீக்கு ரூ.75 ஆயிரம் நஷ்ட ஈடும், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் என்று மொத்தம் ரூ.85 ஆயிரம் வழங்கவேண்டும் என்றும், பெரம்பலூர் ஏஜென்சீஸ் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.
English Summary
court order to Rs85000 compensation for service deficiency