சென்னையில் அதிகரித்த கொரோனா தொற்று.. சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை.!! 
                                    
                                    
                                   corona test in chennai
 
                                 
                               
                                
                                      
                                            இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மீண்டும் அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நாடு முழுவதும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில்  1459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.