சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்.. மாநகராட்சி அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த, நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Corona restrictions will be implemented in Chennai Corporation order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->