ரூ.1,000 கோடி ஊழல்.. சிக்கிய முக்கிய பென்டிரைவ்கள்! அமலாக்கத்துறை ரெய்டின் அப்டேட்!
TASMAC ED Raid update
தமிழக டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6 முதல் 8 வரை சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில் ரூ.1,000 கோடி மதிப்பில் துயரமான முறைகேடு நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமலாக்கத்துறையின் சோதனையை எதிர்த்து தமிழக அரசு சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், விசாரணை தொடர நீதிமன்றம் அனுமதி வழங்கியது. மேலும், இதனை உச்சநீதிமன்றமும் இதை உறுதி செய்தது.
இதையடுத்து, 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குநர் விசாகன் வீட்டில் அதிகாரிகள் மீண்டும் சோதனைக்கு ஈடுபட்டனர். அவரது இல்லத்தின் அருகே வீசப்பட்டிருந்த மதுபான ஒப்பந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
விசாகன், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே, சூளைமேடு, பெசன்ட் நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.
தொழிலதிபர் ரத்தீஸ் துபாய் சென்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரது வீட்டை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதற்கிடையே, விசாகன் வீட்டில் நடந்த இருநாள் சோதனையின் முடிவில், ஆவணங்கள், பென்டிரைவ்கள் உள்ளிட்ட பல மின்னணு சாதனங்கள் அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.