ஆந்திராவில் விபத்து! கிணற்றில் கார் மூழ்கி 3 பேர் மரணம்...!
Accident Andhra Pradesh 3 people die after car sinks well
ஆந்திர பிரதேசம் மாநிலம் அன்னமைய்யா பீலேரு அடுத்த பாலாமுவாரி பள்ளி அருகே இன்று அதிகாலை, கார் ஒன்று வேகமாக வந்து கொண்டு இருந்தது.அந்நேரம், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கிணற்றில் பாய்ந்தது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,காரிலிருந்த 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்தச் சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுத்தொடர்பாக காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
சற்றும் தாமதிக்காமல் காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு அதிலிருந்த 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து மேற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Accident Andhra Pradesh 3 people die after car sinks well