தமிழகம்: துப்பாக்கியை காட்டி மிரட்டல்... போக்ஸோ வழக்கில் பாஜக நிர்வாகி கைது!
Tenkasi BJP Member Arrest in pocso case
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டு, குடும்ப நண்பரின் வீடு சென்ற போது, அங்கிருந்த சிறுமிக்கு நீலகண்டன் பாலியல் தொல்லை அளித்ததாகவும், இது குறித்து யாரிடமும் கூறக் கூடாது என துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் தந்தை ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தந்தையின் மனுவைப் பரிசீலித்த நீதிபதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், ஆலங்குளம் போலீசார் நீலகண்டனை எதிர்த்து போக்சோ மற்றும் பிற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary
Tenkasi BJP Member Arrest in pocso case