One pot rice : கத்திரிக்காய் வாங்கிபாத் செய்யலாமா....!!! - Seithipunal
Seithipunal


கத்திரிக்காயை வைத்து வாங்கி பாத் செய்யும் முறையைப் போகிறோம்.

தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு                       – 1/4 ஸ்பூன்
உளுந்து                       – 1/4 ஸ்பூன்,
வெள்ளை எள்                       – ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய்                       – 7
தேங்காய்                       – 2 பத்தை
மிளகாய் தூள்                       – ஒரு ஸ்பூன்
தனியா தூள்                       – 1/2 ஸ்பூன்
எண்ணெய்                       – 5 டேபிள் ஸ்பூன்


தாளிப்பதற்கு தேவையான பிரியாணி மசாலாக்கள்:
வேர்க்கடலை                       – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம்                       – 1/2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை                       – 2 கொத்து
வெங்காயம்                       – ஒன்று
பச்சை மிளகாய்                       – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்                       – 1/2 டீஸ்பூன்
 தக்காளி                       – ஒன்று
பெரிய கத்திரிக்காய்                       – 2
உப்பு                       – தேவையான அளவு
மஞ்சள் தூள்                       – 1/2 ஸ்பூன்
நெய்                       – ஒரு ஸ்பூன்
அரிசி                       – ஒரு கப்
தண்ணீர்                       – 2 கப்
செய்முறை:
தொடக்கத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். முதலில் அந்த கடாயில் கடலை பருப்பு, உளுந்து, வெள்ளை எள் இவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். பருப்பின் நிறம் லேசாக மாறியதும் அதில் ஐந்து காய்ந்த மிளகாய் போட்டு வறுக்க வேண்டும். பிறகு இரண்டு பத்தை தேங்காயை சிறிது சிறிதாக நறுக்கி அதே கடாயை போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.

பிறகு இதை அப்படியே இறக்கி வைத்து விடுங்கள். இவை அனைத்தும் முற்றிலும் ஆரியபிறகு ஒரு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து இதனுடன் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் இவற்றை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். குக்கர் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் பிரியாணி மசாலாக்களை சேர்க்க வேண்டும்.

பிறகு இதில் வேர்க்கடலையை சேர்த்து வறுக்க வேண்டும். வேர்கடலை லேசாக வறுபட்டதும் சீரகம், கருவேப்பிலை காய்ந்த மிளகாய் போன்றவற்றை போட்டு நன்றாக வதக்குங்கள். கருவேப்பிலையின் நிறம் முற்றிலும் மாறிய பிறகு நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் லேசாக கீறிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட்டையும் சேர்த்து வெங்காயம் நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அதன் பிறகு நீளவாக்கில் நறுக்கிய  தக்காளியை அதில் சேர்த்து தக்காளியை நன்றாக வதக்க வேண்டும். தக்காளியும் நன்றாக வதங்கிய பிறகு நீளவாக்கில் நறுக்கிய கத்திரிக்காயை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போன்றவற்றை சேர்த்து நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருந்த பொடியையும் அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இதில் இரண்டு கப் அளவிற்கு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.

தண்ணீர் கொதித்த பிறகு அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் ஒரு கப் அரிசியை சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய்யை ஊற்றி குக்கர் மூடியை மூடி விட வேண்டும். ஒரு விசில் வந்ததும் அடுப்பை குறைத்து விட்டு அடுத்த விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடுங்கள். விசில் முற்றிலும் நீங்கிய பிறகு அனைவருக்கும் எடுத்து பரிமாறலாம். சுவையான வாங்கிபாத் தயாராகிவிட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

One pot rice eggplant vangibath rice


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->