அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்: ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு மிரட்டல் உள்ளதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது: போலீஸ் விசாரணையில் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டுள்ள வழக்கு மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும்,  தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் வழக்காக மாறியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள், சாட்சிகளாக இருப்பவர்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தான் சென்ற போது கூட இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள் என்று, அஜித்குமார் குடும்பத்துக்கே அச்சுறுத்தல் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என அங்கிருந்தவர்கள் கூறியதாவது,  அவரின் குடும்பத்துக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் டாக்டர் இல்லை என்றும், பி.எச்டி முடித்தவர் என தெரிவதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அவர் குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில், நடவடிக்கை குறித்து புகார் பெற்று உரிய விசாரணை நடத்த வேண்டிய நிலை உள்ளதாகவும், அவர் கோவிலுக்கு அந்த நகையை அவர் கொண்டு வந்தாரா என்ற சந்தேகமும் எழுப்பப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த பின்னணியை கண்டறிய வேண்டியது இந்த வழக்குக்கும் அவசியமானதாகவும், அவருக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால்,இதனை நீதிமன்றத்தில் அரசு மறுத்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். நிகிதாவை சுற்றி, இதுபோன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தனி வழக்காக பதிவு செய்து அவரிடம் விசாரிக்க வேண்டும் வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மேற்கொள்ளும் 'தமிழகம் காப்போம்' பயணம் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.  அத்துடன், கல்விக்கான நிதியை தரக் கோரி, பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் முறையிட்டார். இதன் பிறகும் நிதியை தர தயாராக இல்லை என்பது அவர்களின் தமிழகத்தின் மீதான கரிசனத்தை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்துக்கு எதிராக செயல்பட்டு கொண்டு, தி.மு.க.,வுக்கு எதிராக செய்வதை போல் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றும் தமிழக மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் முடக்குவது தமிழகத்துக்கு எதிரானது என்றும்,  அது திமுக.,வுக்கும்,  அரசுக்கு எதிரானது அல்ல என்று அதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thirumavalavan insists on giving it to Ajithkumars family as there are threats


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->