கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி - ஆர்.சி.பி நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த 2025 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி முதல் முறையாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் 4-ந்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் வெற்றிக் கொண்டாட்ட பேரணி நடைபெற்றது. 

இந்தப் பேரணியில் பங்கேற்க லட்சக்கணக்கான ரசிகர்கள் சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன்பு திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.பி. அணி, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது பெங்களூரு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமல்லாமல், காவல்துறை உயர் அதிகாரிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டது. அதன் பின்னர் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இந்த நிலையில், பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது, ஐ.பி.எல். வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று ஆர்.சி.பி. அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

rcb administration compensation announce to peoples died in crowd family


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->