வேறு சாதி பையனை காதலித்த இளம்பெண் கொலை - தந்தை வெறிச்செயல்.!!
man arrested for kill daughter in karnataga
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி பகுதியில் மேலகுண்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கடந்த வியாழக்கிழமை தகவல் வெளியானது. இதையடுத்து சங்கரின் குடும்பத்தினர் அந்த பெண்ணுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சங்கரின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் சங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சங்கர் தனது மகளை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது, சங்கரின் மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் சங்கருக்கு தெரியவந்த நிலையில், காதலை கைவிடுமாறு தனது மகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் அந்த பெண் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். சங்கருக்கு மொத்தம் 5 மகள்கள் உள்ள நிலையில், வேறு சாதியை சேர்ந்த ஆணை தனது மகள் காதலிப்பது ஊராருக்கு தெரியவந்தால், மற்ற மகள்களின் திருமணம் பாதிக்கப்படும் என்று பயந்து தனது மகளை கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு, அவரது வாயில் விஷத்தை ஊற்றி, மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊர் மக்களிடம் கூறியுள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய ஊர் மக்கள் சங்கரின் மகளுக்கு இறுதிச் சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்துள்ளனர் என்பது தெரிய வந்தது. இந்த நிலையில், போலீசார் சங்கர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man arrested for kill daughter in karnataga