மதராஸி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!!
ua certificate to madharasi movie
சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ என்றத் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
‘மதராஸி’ படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளதால் படக்குழுவினர் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மதராஸி திரைப்படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.
English Summary
ua certificate to madharasi movie