தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் மாணவி!
The nursing student who buried the baby alive after witnessing her own delivery
புதுக்கோட்டை அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் பிரசவம் பார்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.குறிப்பாக யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த சம்பவங்களும் அடிக்கடி அரங்கேறியுள்ளது.என்னதான் அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைள் செய்தலும் ஒருசில சட்ட விரோதமான செயல்களை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே நர்சிங் மாணவி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை பெற்றெடுத்து வீட்டின் வாசலிலேயே குழியை தோண்டி பிறந்த குழந்தையை புதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரலை கேட்ட அவ்வழியே சென்ற பெண் ஒருவர்,உடனடியாக அந்த குழியைத்தோண்டி உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் பிறந்த குழந்தை உயிருடன் புதைத்த சம்பவத்தில் கல்லூரி மாணவியின் காதலன் சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக உள்ள நர்சிங் மாணவி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் குழந்தையுடன் இருப்பதால் அவரையும் பின்னர் கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
The nursing student who buried the baby alive after witnessing her own delivery