இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
Shreyas Iyer admitted in icu
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் ஆஸ்திரேலியாவில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கேட்ச் பிடிக்கும் முயற்சியில் ஸ்ரேயஸ் ஐயர் விலா எலும்பு பகுதியில் கடுமையாக காயமடைந்தார். ஆரம்பத்தில் லேசான காயம் என நினைக்கப்பட்டாலும், பரிசோதனையில் உடலுக்குள் ரத்தக் கசிவு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மருத்துவர்கள் அவசரமாக அவரை ஆஸ்திரேலியாவின் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறார்கள்.
ஸ்ரேயஸ் ஐயர் தற்போது நிலைமை ஸ்திரமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும், அவருக்கு சில நாட்கள் முழுமையான ஓய்வு அவசியம் என கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் இந்திய அணியிலும், ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணியின் மூத்த வீரர்கள் மற்றும் மேலாண்மை குழுவினர் மருத்துவமனையுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து அவரின் உடல்நிலையைப் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டு வருகின்றனர்.
English Summary
Shreyas Iyer admitted in icu