தொடர் அட்டூழியம்... மேலும் தமிழக மீனவர்கள் 7 பேர் கைது செய்த இலங்கை கடற்படை!
Continuing the conspiracy Meanwhile the Sri Lankan Navy has arrested 7 Tamil fishermen
ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீன்பிடி தடை காலம் முடிந்து நிம்மதியாக மீன் பிடிக்கலாம் என்று எண்ணி கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு மீண்டும் பேரதிர்ச்சியாக அமைத்திருக்கிறது இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அப்போது கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகு உரிமையாளரான சேசுராஜா, அண்ணாமலை, கல்யாணராமன், செய்யது இப்ராகிம், முனீஸ்வரன், செல்வம், காந்திவேல் உள்பட 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் சென்ற விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாம் கொண்டு சென்று விசாரணை நடத்தியதுடன் . மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .மீனவர்களை வருகிற 3-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், இன்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
English Summary
Continuing the conspiracy Meanwhile the Sri Lankan Navy has arrested 7 Tamil fishermen