காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: இறுதி பட்டியல் வெளியாகும் என தகவல்.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த வாரம் மக்களவைத் தேர்தலில் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இருவரும் கையெழுத்திட்டனர். 

தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்பது குறித்த பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த பட்டியல் அகில இந்திய காங்கிரஸ் ஒப்புதலுக்கு பிறகு நாளை காலை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress contested Constituencies issue


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->