அவசரமாக சென்னைக்கு விரைந்த காங்கிரஸ் தேசிய தலைவர் - காரணம் என்ன?
congrass leader mallikarjune karkhe come to chennai
குடும்ப உறுப்பினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே சென்னைக்கு வருகை தந்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தனி விமான மூலம் இன்று சென்னை வந்தடைந்தார். அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், உள்ளிட்டோர் பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வரவேற்றனர்.
![](https://img.seithipunal.com/media/mallikarjun karke 1-pyuct.png)
அதன் பின்னர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:- "தனிப்பட்ட காரணத்திற்காக சென்னை வந்திருப்பதாகவும், மருத்துவமனையில் உள்ள தனது குடும்ப உறுப்பினரை சந்திப்பதற்காக செல்வதாகவும் தெரிவித்தார். இவரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
congrass leader mallikarjune karkhe come to chennai