மின்சார ரெயில்கள் திடீர் ரத்து: பயணிகள் அதிர்ச்சி!
Commuters shocked by sudden cancellation of electric trains
பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது ரயில் பயணிகளை அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவையாக மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இருந்து வருகிறது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதி நேரமாகவோ மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன, மேலும் வழித்தடங்கள் மாற்றப்படுகின்றன. இந்தநிலையில் அந்த வகையில், தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,மின்சார ரெயில்கள் திடீர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரெயில்வே நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்:சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் புறப்படும் மின்சார ரெயில் பராமரிப்புப் பணியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் சென்னை சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கும், நள்ளிரவு 12.15 மணிக்கும் ஆவடி புறப்படும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் திருவள்ளூரில் இருந்து இரவு 10.15 மணிக்கு ஆவடி புறப்படும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
Commuters shocked by sudden cancellation of electric trains