சிவகங்கையில் 5 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - எப்போது?
coming 30th school and colleges holiday for devar poojai in sivakangai
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜையை முன்னிட்டும் வருகின்ற 28-ந்தேதி முதல் 30-ம்தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.
இந்த விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருகைத தருவார்கள். மேலும், முக்கிய பிரபலங்களும் வருகை தந்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து செல்வார்கள்.

இந்த நிலையில், இந்த விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட ஒன்றியங்களில் வருகிற 30-ந்தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 30th school and colleges holiday for devar poojai in sivakangai