நெருங்கும் தேர்தல் - 10 ஆம் தேதி பாஜக ஆலோசனைக் கூட்டம்.!!
coming 10th bjp meeting in head office for assembly election
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தங்களுக்கான கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் படி இந்த சட்டமன்ற தேர்தலை அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. சந்திக்க தயாராகி வருகிறது.
இந்த நிலையில், பாஜக கட்சியின் சட்டசபை தேர்தல் ஆலோசனை கூட்டம் வரும் 10-ந்தேதி தியாகராயநகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என்று ஏராளமானோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைக்கப்படுகிறது.
மேலும், மாநிலத்தலைவரின் தேர்தல் சுற்றுப்பயணம், பொதுக்கூட்டங்கள், தேசிய தலைவர்களின் தமிழக வருகை மற்றும் சுற்றுப்பயண ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. மாவட்ட அளவில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் பணி ஆற்றுவது குறித்தும் கலந்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.
English Summary
coming 10th bjp meeting in head office for assembly election