சத்தீஸ்கரில் பெரும் துயரம்: பயணிகள் ரயில், சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்..!
10 killed in head on collision between passenger train and freight train in Chhattisgarh
சத்தீஸ்கரில் சரக்கு ரயிலுடன் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் படுகாயம் அடைந்தனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பிலாஸ்பூர் மாவட்டம், ஜெய்ராம் நகர் ரயில்வே ஸ்டேஷன் அருகில் லால்காதன் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கோர்பா பயணிகள் ரயிலும், அதே வழித்தடத்தில் வந்த சரக்கு ரயிலும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்; பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர், ரயில்வே ஊழியர்களுடன் மருத்துவக் குழுவினரும் சென்றுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய பயணிகள் ரயிலில் கூட்டம் நிரம்பி காணப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், விபத்து நிகழ்ந்த வழித்தடத்தில் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வழித்தடத்தில் ரயில்களை இயக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
10 killed in head on collision between passenger train and freight train in Chhattisgarh