பெண்களை மிக ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு பதவியை விருதாக வழங்கி அழகு பார்த்துள்ளது அறிவாலயம் - அதிமுக விமர்சனம்!
ADMK Condemn to DMK MK Stalin Ponmudi
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள இந்த சமயத்தில், பெண்களை மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, பேசிய பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச்செயலாளர் பதவியை Award-ஆக வழங்கி, அழகு பார்த்துள்ளது அறிவாலயம்.
ஆபாசமாக, அவதூறாக, இன ரீதியாக இழிவுபடுத்தி பேசினால் பெயருக்கு ஒரு நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, சில மாதங்கள் சேர்த்து மீண்டும் அதே பதவி வழங்கப்படுவதே திமுக-வின் பார்முலா!
பள்ளி, கல்லூரி, ஏர்போர்ட் வரை எந்த பக்கமும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாத மிக மோசமான நிலைக்கு தமிழ்நாட்டின் ஆட்சியைத் தள்ளிய கட்சியான திமுக, இந்த நியமனத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்களுக்கு சொல்லவரும் செய்தி ஒன்றுதான்:
திமுக எனும் கட்சி பெண்களுக்கு எதிரானது; பெண்களுக்கு எதிரான ஆபாசத்தை Enable செய்வது; பெண்கள் பாதுகாப்பு பற்றி திமுக-விற்கு துளியும் கவலையில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
ADMK Condemn to DMK MK Stalin Ponmudi