காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!
College Student Molested
காஞ்சிபுரம் மன்னர் பெயர் கொண்ட நகரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், தான் படிக்கும் கல்லூரி மாணவருடன் நேற்று இரவு செவிலிமேடு அடுத்த குண்டு குளம் வயல்வெளி பகுதியில் தனியாக பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அந்த பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த 4 மர்ம நபர்கள், இருவரையும் தாக்கி, அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர்.
மேலும், மாணவம் கண்முன்பே, மாணவியை கத்தியை காட்டி மிரட்டி 4 மர்ம நபர்களும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

பின், இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து அந்த மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது.
மாணவனும், மனைவியும் தனியே நடந்து வருவதை பார்த்த ரோந்து பணி போலீசார், இருவரிடமும் விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மாணவியை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.