கோயம்புத்தூர் இளம்பெண் கடத்தல்!
Coimbatore Teenage girl Kidnap
கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் கடத்தல் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சில நாட்களுக்கு முன் கல்லூரி மாணவி ஒருவர் காரில் இருந்த காதலனுடன் பேசிக் கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்திருந்தனர். அந்தச் சம்பவம் அடங்குவதற்குள், புதியதாக இளம்பெண் ஒருவர் காரில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை இருகூர் அத்தப்பகவுண்டன்புதூர் சாலையில் 25 வயது இளம்பெண் ஒருவரை மூவர் தாக்கி விட்டு வலுக்கட்டாயமாக காருக்குள் ஏற்றிச் சென்றுள்ளனர். அந்தக் கார் அங்கிருந்து இருகூர் நோக்கி வேகமாக சென்றுள்ளது. காருக்குள் இருந்த பெண் சத்தம் போட்டு அழுவதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உடனே சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அருகிலிருந்த கண்காணிப்பு காமிராக்கள் பரிசோதிக்கப்பட்டபோது, வெள்ளை நிற கார் வேகமாக செல்வதும், அதன் உள்ளே பெண் கதறி அழுவதும் தெளிவாக பதிவாகியிருந்தது.
கண்காணிப்பு காட்சிகளை கைப்பற்றி போலீசார் காரின் எண்ணை அடையாளம் கண்டு தேடுதல் நடவடிக்கை தொடங்கியுள்ளனர். தற்போது கடத்தப்பட்ட பெண் யார், அவரை கடத்தியவர்கள் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையிலும், போலீசார் நான்கு தனிப்படைகளை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கிறார்கள்.
இது குடும்ப பிரச்சனை காரணமாக நடந்ததா, காதல் தொடர்பான விவகாரமா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். அதே சமயம், காரில் அழைத்து செல்லப்படும் பெண் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Coimbatore Teenage girl Kidnap