கோவையில் பரவும் டெங்கு, வைரஸ்: அரசு மருத்துவமனையில் அலைமோதும் நோயாளிகள்!
Coimbatore spreading Dengue virus
கோயம்புத்தூரில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.
தினந்தோறும் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக சுமார் 50 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சிறப்பு காய்ச்சல் தடுப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தற்போது 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்திருப்பதாவது, பல்வேறு வைரஸ் காய்ச்சல்களால் 30 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் தண்ணீர் மற்றும் கொசு காரணமாக வைரஸ் காய்ச்சல்கள் பரவுகிறது. இதனால் நீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும்.
வீட்டிற்கு முன்பு தேங்கியுள்ள நீரினை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் கொசு பரவாமல் இருப்பதை தடுக்கலாம்.
3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
Coimbatore spreading Dengue virus