கஞ்சா குடிக்கிக்கள் இன்ஸ்டாகிராமில் மயிரை பறக்கவிட்டு ஆட்டம்.. தடம்புரண்ட சிறுமியின் வாழ்க்கை.. கண்ணீரில் பெற்றோர்கள்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புளியகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சண்முகம் (வயது 21). இவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்துள்ளான். மேலும், பல பெண்களுடன் பேசிவந்து இருந்துள்ளான். 

இந்நிலையில், எந்த நேரமும் காதல் வித்தைகளை களமிறக்கி புகைப்படம் பதிவு செய்து வரும் சண்முகத்தின் வலையில், போத்தனூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி விழுந்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னை ஒரு ஹீரோ போல சித்தரித்து தினமும் பல புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில், ஒரே மாதத்தில் சிறுமியின் வாழ்க்கை தடம் புரள துவங்கியுள்ளது. 

இரவு பகலாக செல்போன் மூலமாக இருவரும் காதல் வசனம் பேசிவந்த நிலையில், காமுகனின் பின்புலம் தெரியாது சிறுமியும் மனதினை பறிகொடுத்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பெற்றோர்கள், அவரது அலைபேசியை வாங்கி பார்த்துள்ளனர். இதனையடுத்து சிறுமியின் காதல் விவரம் தெரியவரவே, சிறுமியை எச்சரித்துள்ளனர். 

இதனைக்கேட்ட சிறுமி காமுக காதலனிடம் விசயத்தை தெரிவிக்கவே, வீட்டை விட்டு வந்து விடுமாறும், நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் காதல் வசனம் பேசியுள்ளான். இந்த காதல் திருமணத்திற்கு சிறையில் இருந்தபோது தனக்கு பழக்கமான கஞ்சா குடிக்கிகளான அமர்நாத் மற்றும் வல்லரசு ஆகியோரின் உதவியுடன், கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக சிறுமியை கடத்தி உள்ளான். 

பின்னர் சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து சென்றதும், காமத்தை தேடிய காமுகன் சிறுமியிடம் வெறியை காதல் என்ற போர்வையில் தீர்த்துக்கொண்டு, தனக்கு தெரிந்த பெண் ஒருவரின் வீட்டில் தங்க வைத்துள்ளான். 18 வயது முடியும்வரை பெண் வீட்டில் இருக்குமாறும், இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகளை கூறிவிட்டு அங்கிருந்து நழுவி சென்றுள்ளான். 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை காவல் துறையினர் மீட்ட நிலையில், நான் பெற்றோருடன் செல்ல மாட்டேன் என்றும், நாங்கள் இருவரும் கணவன் - மனைவியாக மாறிவிட்டோம் என்று நாடக காதலனின் பின்புலம் தெரியாமல் பச்சிளம் குழந்தை போல பேசியுள்ளார். 

இதனையடுத்து சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சண்முகம், அவனுக்கு உதவியாக இருந்த வல்லரசு, அமர்நாத் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் கொலை மற்றும் கஞ்சா வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்த நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையறிந்த சிறுமி விழிபிதுங்கி கண்ணீருடன் நிற்கவே, சிறுமிக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இளம் சிறுமிகள் இணையதள பழக்கங்களால், பதின்ம வயதால் ஏற்படும் பருவக்காதலால் தங்களின் வாழ்க்கையை இழந்து கொள்வது பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாக காவல்துறையினர் வருத்தத்தை வெளிப்படுத்துகின்றனர். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பாதுகாப்பாக பார்த்து, வாழ்க்கைக்கு தேவையான அறிவுரையை வழங்குமாறும் கூறியுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Coimbatore Pulikulam culprit Shanmugam cheat girl using Drama Love


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->