அனைத்துக்கட்சி கூட்டம்: மத்திய அரசு அறிவிப்பு!
All-party meeting Central government announcement
அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் பாகிஸ்தானுக்கு ,இந்தியா பதிலடி கொடுத்த விவகாரம், இந்த விஷயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலையிட்டது, போன்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
இதையடுத்து நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந்தேதி வரை நடைபெறும் என கடந்த மாதம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.வழக்கமாக ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பாக ஆளுங்கட்சி, அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தும். அதன்படி இந்த மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அனைத்துக்கட்சி கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.மேலும் ஆகஸ்டு 12-ந்தேதி முடிவடைய இருந்த கூட்டத்தொடர் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 13 மற்றும் 14-ந்தேதிகளில் அமர்வுகள் இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார் .
முக்கியமான மசோதா அறிமுகத்தில் அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது தொடர்பான மசோதாவும் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
English Summary
All-party meeting Central government announcement