மக்களின் கடும் எதிர்ப்பால் அடி பணிந்தது டெல்லி அரசு!
The Delhi government has bowed down due to the strong opposition from the people
டெல்லி மக்களின் கடும் எதிர்ப்பால்பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது.
மாசு கட்டுப்பாடை அகற்றும் விதமாக டெல்லியில் 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான மாநில அரசு ஜூலை 1 முதல் தடை விதித்தது.இந்த உத்தரவால் சுமார் 62 லட்சம் வாகனங்கள் ஒரே இரவில் மாயமாகும் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியிருந்தது.
இந்த அறிவிப்பு டெல்லி மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதுமட்டுமல்லாமல் ஆளும் கட்சிகளுக்கு எதிராக எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தடையை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர்.இந்நிலையில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க மறுக்கும் சர்ச்சைக்குரிய உத்தரவை டெல்லி அரசு கைவிட்டுள்ளது.பொதுமக்களின் கடும் எதிர்ப்பு மற்றும் கோபத்திற்குப் பிறகு, இந்த முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்த தடையை விதிக்க ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எவ்வளவு பணம் வாங்கியுள்ளது என எதிர்கட்சித் தலைவர் அதிஷி கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது
English Summary
The Delhi government has bowed down due to the strong opposition from the people