போனில் விதவை பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. வீட்டிற்கு வரவழைத்து அடித்து கொலை.. கோவையில் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் காரமடை பெரியார் நகர் பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வாலிபர் ஒருவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அடித்து கொலை செய்து தண்டவாளத்தில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலையான நபர் குறித்த விசாரணையில், அந்த நபர் முந்தைய நாள் இரவு நேரத்தில் தனலட்சுமி என்பவரை தேடி வந்ததாகவும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை விரட்டி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து அந்தப் பெண்மணியை விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி பகுதியை சேர்ந்த பெரியசாமி மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் மற்றொரு நபருக்கு போன் செய்த போது, நம்பர் பிழையால் தனலட்சுமிக்கு அழைப்பு வந்துள்ளது. 

தனலட்சுமி இயல்பாகவே அமைதியாக பேசும் வெகுளி குணம் கொண்ட பெண்ணாக இருந்துள்ளார். இவரது முதல் பேச்சிலேயே தனலட்சுமியை தனது காதல் வலையில் வீழ்த்த திட்டமிட்ட காமுகன், கொஞ்சம் கொஞ்சமாக காதல் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளான். மேலும், அடிக்கடி தனலட்சுமிக்கு தொடர்பு கொண்டு உல்லாசமாக இருக்கவும் அழைப்பு விடுத்துள்ளான். 

தனலட்சுமிக்கு பெண் குழந்தை உள்ள நிலையில், கணவரும் இல்லாததால் இதனை வெளியே தெரிவிக்க இயலாமல் தவித்து வந்துள்ளார். காமுகனின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லவே, உறவினர் லட்சுமணன் என்பவரிடம் இது குறித்து கூறி கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்ட லட்சுமணன் பெரும் ஆத்திரத்திற்கு உள்ளாகி, பெரியசாமியை தனலட்சுமி மூலமாகவே வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவனை சத்தமிட்டு எச்சரித்து அனுப்பும் முடிவில் இருந்த நிலையில், பெண்ணை படுக்கைக்கு அழைத்த கொடூரன் நேரில் சிக்கியதும் ஆத்திரம் அதிகரித்துள்ளது. வீட்டிற்கு பின்புறம் உள்ள மரத்தில் கட்டிவைத்து குடும்பத்துடன் அடித்து நொறுக்கியுள்ளனர். 

இதனால் சம்பவ இடத்திலேயே பெரியசாமி துடிதுடித்து பலியாகியுள்ளார். இதன்பின்னர் தற்கொலை போல சித்தரிக்க இரயில்வே தண்டவாளம் அருகே உடலை வீசிவிட்டு சென்றதும் தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக தனலட்சுமி, லட்சுமணன் உட்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Mettupalayam Murder Mystery Police Investigation


கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
கருத்துக் கணிப்பு

ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை வரும் ஜனவரிக்குள் அறிவிப்பாரா?
Seithipunal