கல்லூரி மாணவியிடம் 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
Coimbatore college student seized ganja
கோயம்புத்தூர், துடியலூர் சாலையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காளப்பட்டி சாலையைச் சேர்ந்த ஓட்டுனர் ஜனார்த்தனன் (வயது 21), மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சபரீஷ் (வயது 19), லோகேஸ்வரி (வயது 23). ஆசினா (வயது 21), சந்தியா (வயது 20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட சந்தியா தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் என்ற செயலி மூலம் கஞ்சா விற்பனை செய்வதற்காக லிங்கை உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் கஞ்சா விற்பனை செய்யப்படும் இடம், நேரம் உள்ளிட்ட தகவல்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அனுப்பி வந்துள்ளார்.
மேலும் மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் பின் தொடர்வது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட லோகேஸ்வரி, ஆசினா இருவரும் பட்டப்படிப்பை முடித்த நிலையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவி உட்பட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து போலீசார் 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
English Summary
Coimbatore college student seized ganja