கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான மூவரையும் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி மனு!
Coimbatore college student abuse case update
கோவை விமான நிலையத்தின் பின்புறம் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் அடையாள அணிவகுப்பு (Identification Parade) நடத்த அனுமதி கோரி பீளமேடு காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
சதீஷ் என்ற கருப்புசாமி (30)
குணா என்ற தவசி (20)
கார்த்தி என்ற காளீஸ்வரன் (21)
இந்த மூன்று நபர்களையும், பாதிக்கப்பட்ட பெண் நேரில் அடையாளம் காட்டுவதற்காக, அவர்களை அவர் முன்பு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி பீளமேடு காவல்துறையினர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
English Summary
Coimbatore college student abuse case update