2 நாளில் 5 பெண்கள்! கைவரிசை காட்டி தப்பி ஓடிய மர்ம ஆசாமிகள்! போலீசார் வலைவீச்சு!
Coimbatore 5 women snatched jewelry
கோவை மாநகரில் கடந்த சில மாதங்களாக தனியாக செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் தங்க நகைகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் மட்டும் ரத்தினபுரி, டாடாபாத், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் மூன்று பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பாப்பநாயக்கன்பாளையம் அருகே பழையூறை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி லதா (வயது 55) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுபோல செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு முதல் போலீசார் முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார் பேருந்து நிலையம், மார்க்கெட் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாநகரக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து பின்னர் விடுவிக்கின்றனர்.
English Summary
Coimbatore 5 women snatched jewelry