அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம்.!! முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!
CMMKStalin announced breakfast program in all schools
தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான பயனாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 35,923 சிறப்பு முகாம்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

மகளிர் உரிமைத்த்தொகை திட்டத்திற்கான காண முகாமை தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் "நவீன தமிழ்நாட்டை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி வழியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக கொண்டுவர உழைத்துக் கொண்டிருக்கிறோம்.

தமிழக அரசால் செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டுள்ள காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக முழுவதும் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர். கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்தை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலான மாணவிகள் பயன்பெறுகின்றனர்" என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
English Summary
CMMKStalin announced breakfast program in all schools