கடலில் மூழ்கி உயிரிழந்த சுற்றுலா பயணிகள் - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு.!!
cm stalin compensation announce to peoples died for drowned sea near chengalpat
செங்கல்பட்டு அருகே கடலில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டம், நெம்மேலி கிராமம், சூளேரி காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடந்த 28.9.2025 அன்று மாலை சுமார் 5.00 மணியளவில் சென்னை, பெரம்பூர் அகரம் பகுதியிலிருந்து மகேந்திரா வேன் மூலம் 17 நபர்கள் சுற்றுலா வந்தனர்.

அவர்களில், பெரம்பூர், சக்கரபாணி தோட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் த/பெ.சந்திரன் என்பவர் எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி உயிரிழந்தார். மேலும், அவரது இரண்டு மகள்கள் கார்த்திகா மற்றும் துளசி ஆகிய இருவரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டு 30.9.2025 அன்று இருவரின் உடல்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த துயரகரமானச் செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
cm stalin compensation announce to peoples died for drowned sea near chengalpat