#BREAKING || பருவம் தவறிய கனமழை... விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறியகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக ரூ.112.72 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் "நடப்பை 2023 ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பீடு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டெருக்கு ரூ.20 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக டெக்டருக்கு ரூ.3000மும் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் 06.02.2023 அன்று அறிவித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த்துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர் சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

இதில் 93,876 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் உள்ளிட்ட இதர பயிர்கள் 33% மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளது என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் 1,33,397 விவசாயிகள் பயனடையும் வகையில் 93,876 எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து ரூ.112.72 கோடி வழங்க ஆணையிட்டு உள்ளார்கள்.

இந்த நிவாரண உதவியானது தொடர்புடைய விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையும் வழங்கியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin announced increased relief fund to farmers


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->