கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராஜாவுக்கு ரூ.5 லட்சம் நிதியதவி - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal



கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சேலம் கோவிந்தபாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியதவியை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா என்ற காரவடையான் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 14.2.2023 அன்று காவிரியாற்றில் மீன்பிடிக்கச் சென்றார்கள்.

அவர்கள் மீது கர்நாடக மாநில வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராஜா என்ற காரவடையான் உயிரிழந்துள்ளார் எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜா என்ற காரவடையான் உடல் சென்னம்பட்டி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில வனத்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இச்சம்பவத்தில் உயிரிழந்த ராஜா என்ற காரவடையானை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 வட்சம் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin Announce Fisherman Killed case


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...


செய்திகள்



Seithipunal
--> -->