மறைந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.!! - Seithipunal
Seithipunal


தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் புற்றுநோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக விடுமுறை எடுத்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிச்சடங்கு சென்னையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், பீலா வெங்கடேசனின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 “தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பல பெரும் பொறுப்புகளில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றிருந்த அவரது அகால மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் உடல் நலக்குறைவால் காலமான ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இவருடன் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm mk stalin tribute ias officer beela vengatesan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->