தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை ஆலோசனை.!!
transport department discuss 24607 special bus run in tamilnadu
தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:- "ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, நாளை முதல் வரும் 30-ந் தேதி வரை 3,225 சிறப்பு பேருந்துகள் உள்பட 11,593 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தீபாவளி பண்டிகைக்கு, சென்னையில் இருந்து அக்டோபர் 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 4,253 சிறப்பு பேருந்துகள் உள்பட 10,529 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதாவது, 9,963 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 24,607 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அடுத்த மாதம் முதல் வாரத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
transport department discuss 24607 special bus run in tamilnadu