ஏடிஎம்மில் பணம் எடுத்து தருவதாக கூறி பணமோசடி - வாலிபர் கைது.!
youth arrested for money fraud in madurai
மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் பாண்டி. இவர் கடந்த 21ஆம் தேதி திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.
பாண்டிக்கு பணம் எடுக்க தெரியாததால் ஏ.டி.எம். அறையில் இருந்த வாலிபர் ஒருவரிடம் தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தரும்படி கேட்டுள்ளார். வாலிபர் கார்டை வாங்கி ரகசிய எண்ணை பெற்றுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

முதியவர் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது அந்த வாலிபர் அதேபோன்ற ஏ.டி.எம். கார்டை மாற்றி பாண்டியிடம் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்டு பாண்டியும் அங்கிருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் பாண்டியின் வாங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டி தனது மகனிடம் கூறி உள்ளார். அவரும் பரிசோதித்த போது பாண்டியன் வங்கி கணக்கிலிருந்து ரூ. 73 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால்அதிர்ச்சி அடைந்த பாண்டி திருமங்கலம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் படி போலீசார் விசாரணை மேற்கொண்டபோது வங்கி ஏ.டி.எம்.-ல் மூன்று முறையும், நகைக்கடை ஒன்றில் ஒரு முறையும் என்று மொத்தம் 73 ஆயிரம் எடுத்தது தெரிய வந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்த வாலிபர் சிவகாசியை சேர்ந்த மாரிமுத்து என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
youth arrested for money fraud in madurai