விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு.!!
cm mk stalin compensation announce to viruthunagar firecrackers factory employee died family
சிவகாசி, விருதுநகர், சாத்தூர் பகுதிகளில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் பணி புரிந்து வருகின்றனர். அப்படி வேலை செய்யும் பொது எதிர்பாராத விதமாக வெடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால், தொழிலாளர்கள் உயிரிழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணமும் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

"விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று காலை 11.30 மணியளவில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் முத்துலட்சுமி, சண்முகத்தாய் மற்றும் கீழ கோதைநாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசன் ஆகிய மூன்று நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாரியம்மாள் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 1 லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
cm mk stalin compensation announce to viruthunagar firecrackers factory employee died family