உ.வே.சாவின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைக் கூட்டம் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று தமிழக சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கேள்வி நேரம் தொடங்கியதும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், உ.வே.சாமிநாதரின் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அதாவது உவேசாவின் பிறந்தநாளான பிப்ரவரி மாதம் 19-ந்தேதியை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினமாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் அறிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin announce uv saminathar birthday celebrated tamil literature revival day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->