"திருச்செங்கோடு தேர் விபத்து" உயிரிழந்த வாலிபர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி; முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு!
CM Joseph Vijay Announces 5 Lakh Solatium for Family of Youth Killed in Tiruchengode Temple Car Accident
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட விபற்றில் சிக்கி உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
விபத்து குறித்த பின்னணி:
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை சுமார் 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது.
இந்தத் தேரோட்டத்தின் போது, எதிர்பாராதவிதமாகத் தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே திரு. ஹர்ஷ்வர்தன் (வயது 18, த/பெ. கோவிந்தராஜா) என்ற இளைஞர் சிக்கிக்கொண்டு பலத்த காயமடைந்தார்.
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் அங்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலமைச்சரின் இரங்கலும் நிதியுதவியும்:
இந்தத் துயரமான செய்தியினைக் கேட்டுத் தான் மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
நிதியுதவி: உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
சிறப்புச் சிகிச்சை: மேலும், இதே விபற்றில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திரு. சஷ்டிகன் (வயது 19, த/பெ. கௌரிசங்கர்) என்பவருக்குச் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
CM Joseph Vijay Announces 5 Lakh Solatium for Family of Youth Killed in Tiruchengode Temple Car Accident