தாராபுரத்தில் பரபரப்பு.. பாஜக-இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் இடையே மோதல்..!! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள பாஜக நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பொதுமக்களிடையே ஒலிபரப்பு செய்தனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

திருப்பூர் மாவட்ட பாஜக தலைவர் மங்களம் ரவி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் யாரும் வராததால் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இது குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக கிண்டல் அடித்து விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருப்பூர் பாஜக மாவட்ட தலைவர் மங்களம் ரவி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் குடிபோதையில் கொங்கு ரமேஷ் தரப்பினரை தாராபுரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கொங்கு உணவகம் முன்பு ஒருவரை ஒருவர் கட்டைகளால் தாக்கிக் கொண்டனர். இரு தரப்பினரும் வேட்டியை உருவி, சட்டையை கிழித்துக்கொண்டு தரையில் புரண்டு மல்லு கட்டிய சம்பவத்தால் தாராபுரம் பேருந்து நிலையம் பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தாராபுரம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Clash between BJP Hindu makkal katchi district leaders


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->