சினிமா பாணி கொள்ளை! நகைக் கடை சுவரை துளையிட்டு ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.1 லட்சம் அள்ளிய மர்ம கும்பல்...! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுமனைத் தெருவைச் சேர்ந்த அலியார் மற்றும் அவரது மகன் முகமது அசனார் ஆகியோர் நடத்திவரும் நகைக் கடை, மர்ம நபர்களின் இலக்காக மாறியுள்ளது.

வழக்கம்போல் கடையை பூட்டி சென்ற அவர்கள், மறுநாள் காலை திறந்தபோது உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். மேலதிகமாக ஆய்வு செய்தபோது, கடையின் பின்புறச் சுவரில் பெரிய துளை உருவாக்கி அதன்மூலம் கொள்ளையர்கள் உள்ளே புகுந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், சேரன்மாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான காவலர்கள் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரிக்கப்பட்டதுடன், மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.முதற்கட்ட விசாரணையில், கடையில் இருந்த சுமார் 1 கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே பகுதியில் நகை வழிப்பறி சம்பவம் நடைபெற்றிருந்த நிலையில், மீண்டும் நடந்த இந்த கொள்ளை வணிகர்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

தற்போது, சம்பவம் நடந்த பகுதியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வழக்குப் பதிவு செய்த காவலர்கள், குற்றவாளிகளை பிடிக்க விரைவான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஜார் பகுதியில் சுவரை உடைத்து நடத்தப்பட்ட இந்த துணிச்சலான கொள்ளை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cinema style robbery mysterious gang broke through wall jewelry store and stole one kilo silver and 1 lakh


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




சினிமா

Seithipunal
--> -->