#அரியலூர் : குளிர்பானம் குடித்த 8 வயது சிறுமி பலி.! தாகத்தை தீர்க்க நினைத்த தாய்க்கு துயரம்.!
Child drunk Sprite death
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருக்கு 8 வயது மகள் இருந்துள்ளார். அந்த சிறுமிக்கு சிறுநீரக செயல்பாடு குறைவாக இருந்ததன் காரணமாக அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 30ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நேற்று மதியம் டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. அதன் பின் அந்த சிறுமி குடிக்க தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது தாய் தண்ணீர் கொடுக்க முனைந்தார்.

அருகில் இருந்த பாட்டிலில் குளிர்பானம் இருப்பது தெரியாமல் தண்ணீர் என நினைத்துக் கொண்டு அதை தனது குழந்தைக்கு தாய் எடுத்துக் கொடுத்துள்ளார். அதை குடித்த சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இன்று காலை உயிரிழந்து இருக்கிறார்.
இருப்பினும் அவரது இறப்பிற்கு முழு காரணம் என்ன என்பது பற்றி உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் தான் தெரிய வரும். இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.