திருப்பூர்: பேருந்து நிலையத்தில் பழச்சாறு அருந்திய குழந்தை மரணம்., குடும்பத்தினர் சோகம்.!! - Seithipunal
Seithipunal


பேருந்து நிலையத்தில் பழச்சாறு வாங்கி குடித்த 6 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த குட்டூ குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஜவுளி உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை அவரது குடும்பத்துடன் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.

அவர் வர நேரமானதால் மனைவி தனது குழந்தைக்கு அங்குள்ள கடையில் பழச்சாறு ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இதனை அடுத்து, அவர்கள் வீட்டிற்கு சென்ற போது அவர்களின் மூத்த மகனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது.

இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவனின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சிறுவனின் இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் பழச்சாறு குடித்தது தான் அவரது இறப்புக்கு காரணமா? அல்லது வேறேதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Child dies after drinking fruit juice at bus station


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->