முதல்-அமைச்சருக்கு ஆஞ்சியோ பரிசோதனை: அமைச்சர் தகவல்!
Chief Ministers Aanjiyo Examination Ministers Information
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து வந்தார்,இந்தநிலையில் 21 தேதி வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர், ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் பரிசோதனையை மேற்கொண்டதை தொடர்ந்து அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து ‘முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் இருக்கும் நிலையிலும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இருப்பினும் 4-வது நாளாக இன்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை. நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். முதல்-அமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
English Summary
Chief Ministers Aanjiyo Examination Ministers Information